|
|||||||||
|
கணிப்பொறியியல் கலைச்சொல்லாக்கம் கணிப்பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் தமிழ்க் கலைச்சொல்லாக்கம் தொடர்பான தகவல்களும், கட்டுரைகளும், சிக்கல்களும் இங்கே இடம்பெறும். நான் உருவாக்கிய கலைச்சொற்களின் பட்டியலும் வெளியிடப்படும். ...கணிப்பொறித் துறைசார்ந்த கலைச்சொல்லாக்கத்துக்கு, அத்துறைசார்ந்த புலமை போதும் என்பது பாதி உண்மைதான்... கணிப்பொறி நிரலாக்கத்தில் பயன்படும் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்க மேம்போக்கான கணிப்பொறி அறிவு மட்டும் போதாது, கணிப்பொறி நிரலாக்கம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்... பொறியியல் கல்லூரிகளில் கணிப்பொறித் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்ற, பிணையத் தொழில்நுட்பம் (Network Technology) பற்றிய ஒரு முழுமையான பாடநூலைத் தமிழில் எழுதியபோது, குறிப்பிட்ட புலம் அல்லது களம்சார்ந்த கலைச்சொல்லாக்கத்துக்கு, அந்தந்தப் புலம்சார்ந்த அறிவு (Field Knowledge) அல்லது களம்சார்ந்த அறிவு (Domain Knowledge) எவ்வளவு இன்றியமையாதது என்பதை அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. [.....]
கணிப்பொறியியல் கலைச்சொல் திரட்டு
.....கண்காட்சியைக் காண வந்தவர்களில் பலரும் கலைச்சொல் பட்டியலை நின்று படித்துவிட்டே சென்றனர். சிலர் கைக்குக் கிடைத்த தாள்களில் கலைச்சொற்களை எழுதிக் கொண்டனர். தாள் கிடைக்காதவர்கள் தங்கள் செல்பேசியிலும் கேமராவிலும் படம் பிடித்துக் கொண்டனர். கலைச்சொல் பட்டியல் அச்சுப் பிரதியாகக் கிடைக்குமா என்று பலரும் கண்காட்சி அலுவலகத்தில் கேட்டுச் சென்றனர். [.....]
செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகத்துக்கான 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெற்றது. அம்மாநாட்டில் ”செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகம்” என்னும் தலைப்பில் நான் கட்டுரை படித்தேன். செல்பேசிகளில் தமிழ் இடைமுகத்துக்கான சில கலைச்சொற்களைப் பரிந்துரை செய்திருந்தேன். அவற்றை இங்கு வெளியிடுகிறேன். [.....]
கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தில் கவனம் தேவை: கணினி பற்றிய தகவல்களை எளிமையாக மக்களிடம் எடுத்து செல்வதற்கு ஒரு வழி, அந்த தகவல்கள் அனைத்தும் அவரவருடைய தாய்மொழியில் இருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இந்தப் பணியை பலர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தப் பணியை செய்வதில் முன்னோடியாக இருந்து வருகிறவர் மு. சிவலிங்கம் அவர்கள்.....தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். [.....]
கணித்தமிழ்ச் சொல்லாக்கத்தில் .....கணிப்பொறி அறிவியலிலும், தமிழ் மொழியிலும் ஒருசேரப் புலமை பெற்ற கட்டுரையாளர்கள் மிகவும் சொற்பமே. அப்படிப்பட்டவர்கள்கூட தமிழ்க் கலைச்சொற்களைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதத் தயங்குகின்றனர். ..... ஆங்கிலச் சொற்களை அப்படியே மொழிபெயர்க்கக் கூடாது. (Hardware - வன்பொருள், Software - மென்பொருள்) மேலிருந்து நீர் கொட்டுவதால் ஆங்கிலேயர் Water falls என்று சொல்ல ‘நீர்வீழ்ச்சி’ என்று மொழி பெயர்த்தனர், அருவி என்ற சொல்லை அறியாதவர்கள் [.....] இன்னும் வரும்... |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||