|
|||||||||
|
அன்புடையீர்! வருக! வணக்கம்! இலக்கியம், கணிப்பொறி, அறிவியல், தொழில்நுட்பம். சட்டம், தத்துவம் ஆகிய துறைகளில் இதுவரையில் நான் கற்ற அறிவையும், பெற்ற அனுபவத்தையும், எழுதிய படைப்புகளையும் தமிழ்பேசும் சமூகம் முழுமைக்கும் பயன்படும் வகையில் இணையத்தில் வெளியிட வேண்டும் என்ற என் பிள்ளைகளின் விருப்பத்துக்கு இணங்க அவற்றை உங்கள் முன் வைக்கிறேன். நீங்கள் தரும் ஊக்கமும் உற்சாகமும் என்னை இன்னும் நிறைய எழுத வைக்கும்.
கணிப்பொறியியல் கலைச்சொல் திரட்டு
.....கண்காட்சியைக் காண வந்தவர்களில் பலரும் கலைச்சொல் பட்டியலை நின்று படித்துவிட்டே சென்றனர். சிலர் கைக்குக் கிடைத்த தாள்களில் கலைச்சொற்களை எழுதிக் கொண்டனர். தாள் கிடைக்காதவர்கள் தங்கள் செல்பேசியிலும் கேமராவிலும் படம் பிடித்துக் கொண்டனர். கலைச்சொல் பட்டியல் அச்சுப் பிரதியாகக் கிடைக்குமா என்று பலரும் கண்காட்சி அலுவலகத்தில் கேட்டுச் சென்றனர். [.....]
செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகம்
.....ஆங்கில இடைமுகங்களில் கலைச்சொற்கள் அவ்வாறு ஒன்றுபோலவே அமைந்துள்ளன. அதுபோலத் தமிழ் இடைமுகங்களிலும் கலைச்சொற்கள் ஒன்றுபோல அமைய வேண்டும். எனவே செல்பேசிக் கருவிகளுக்கான தமிழ்க் கலைச்சொற்கள் தரப்படுத்தப்பட்டு, பொதுவான தமிழ் இடைமுகம் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும். [.....]
செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகத்துக்கான 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, உலகத் தமிழ் இணைய மாநாடும் நடைபெற்றது. அம்மாநாட்டில் ”செல்பேசிகளில் தரப்படுத்தப்பட்ட தமிழ் இடைமுகம்” என்னும் தலைப்பில் நான் கட்டுரை படித்தேன். செல்பேசிகளில் தமிழ் இடைமுகத்துக்கான சில கலைச்சொற்களைப் பரிந்துரை செய்திருந்தேன். அவற்றை இங்கு வெளியிடுகிறேன். [.....]
பாடம் 1.1: ஒரு புதிய மொழியின் தேவை
...அந்தந்தக் காலகட்டத்தின் தேவைகளுக்கும் பயன்பாடுகளுக்கும் ஏற்பப் புதிய புதிய மொழிகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் சில முற்றிலும் புதியன. சில முந்தைய மொழியை மேம்படுத்தி உருவாக்கப்பட்டவை. வேறுசில முந்தைய மொழிகளை அடிப்படையாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டவை. அந்த வகையில் சி# என்கிற புதிய மொழி உருவாக்கப்பட வேண்டிய தேவை என்ன [.....]
பாடம் 1.2: சி# மொழியின் சிறப்புத் தன்மைகள்
...பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளுள் 100% முழுமையான பொருள்நோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Language), உலகின் முதல் பொருள்கூறு நோக்கு நிரலாக்க மொழி (Component Oriented Programming Language) என்கிற தனக்கே உரிய சிறப்புத் தன்மைகள் சி# மொழிக்கு உண்டு. [.....]
பாடம் 1.3: மைக்ரோசாஃப்டின் டாட்நெட்
டாட்நெட் அப்ளிகேஷன் உருவாக்கக் கருவிகளை வழங்கும் விசுவல் ஸ்டுடியோ.நெட்டில் சி#, சி++, விசுவல் பேசிக், ஜே#, ஜேஸ்கிரிப்ட் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.....இவைதவிர கோபால், ஈபெல், பேர்ல், பைத்தான், ஸ்மால்டாக், மெர்க்குரி, ஸ்கீம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புரோகிராம்களையும் டாட்நெட்டின் பொதுமொழி இயக்கத்தளத்தில் இயக்க முடியும். [.....]
பாடம் 1.4: சி, சி++ மொழிகளிலிருந்து சி# எவ்வாறு வேறுபடுகிறது?
....ஜாவாவையும் சி# மொழியையும் நேரடியாக ஒப்பிடலாம்....சி, சி++ மொழிகளை சி# மொழியோடு நேரடியாக ஒப்பிட முடியாது. என்றாலும் சி# மொழியின் முன்னோடிகள் என்ற வகையில் சி, சி++ மொழிகளின் கருத்துருக்கள் சி# மொழியில் எந்த அளவுக்கு எடுத்தாளப்பட்டுள்ளன....என்று அறிந்து கொள்வது சி# மொழி பற்றிய சரியான புரிதலுக்கு உதவும். [.....]
பாடம் 1.5: ஜாவா - சி#: ஒற்றுமை வேற்றுமைகள்
சி# மொழி, சி++ மொழியிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்டது. அதேபோல ஜாவா மொழியும் சி++ மொழியை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. எனவே ஜாவாவுக்கும் சி# மொழிக்கும் இடையே பல ஒற்றுமைகளைக் காண முடியும். [.....] வன்முறையை எதிர்த்தும், கம்யூனிசத் தீவிரவாதக் கொள்கைகளை எதிர்த்தும் பாடப்பட்ட வெண்பாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. ஆச்சரியம் என்னவெனில் கம்யூனிசக் கொள்கையையே வலியுறுத்தி எழுதப்பட்ட என்னுடைய வெண்பா பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலாவது வெண்பாவாக வெளியிடப்பட்டிருந்தது. [.....]
எஞ்சினியரிங் கவுன்சிலிங்கில் ...பிளஸ்-2 முடித்து பொறியியல் கல்லூரிகளில் இடம்பெறக் காத்திருக்கும் மாணவர்கள் கீழ்க்காணும் அடிப்படையில் / வரிசையில் தங்களது வருங்காலப் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்:
(1) மாணவர் படிக்க விரும்பும் பாடம் |
|
||||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||