|
|||||||||
|
வாழ வகுப்போம் வழி! [1994-இல் நான் பணிபுரிந்த அலுவலகத்தில் முத்தமிழ் மன்றம் ஈற்றடி வெண்பாப் போட்டி நடத்தியது. என் முன்கதை அறிந்த என்கீழ்ப் பணிபுரிந்த அலுவலர்கள் என்னை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கேட்டுக் கொண்டனர். கவிதை எழுதுவதை நிறுத்தி 20 ஆண்டுகள் ஆன நிலையில் முதலில் மறுத்த நான் அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கினேன். கடகடவென நான் வெண்பாக்களைக் கூற என் உதவியாளர் எழுதி, எடுத்துச் சென்று போட்டியில் சேர்த்தார். முதல் வெண்பாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. அனைத்துமே சிறந்த வெண்பாக்கள் என முத்தமிழ் மன்றப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது]
காடு வளர்த்திடுவோம்! காற்று,நீர் மாசுபடும்
இல்லாரும் கல்லாரும் இல்லாமல் செய்திடுவோம்!
பாரதத்தை துண்டாடும் பாதகத்தைக் கண்டறிந்து
ஊழா? வினையா? உறுத்துவந்(து) ஊட்டுமா?
’சாதி’ ‘இனம்’சொல்லும் சண்டாளர் சூழ்ச்சிகளை
சுட்டு விரலாகிச் சுட்டவிழி நீர்துடைப்போம்! குறிப்பு: இதே ஈற்றடியை வைத்து வாசகர்களும் வெண்பாக்களை அனுப்பி வைக்கலாம். சிறந்தவற்றை இங்கே பிரசுரிப்பேன். |
|
|||||||
|
இவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன
வலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்
|
|||||||||